ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்கள் ? - ரிசர்வ் வங்கி மறுப்பு

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அவர்களின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகியவை மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், " ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக மற்றவர்களின் படத்தை மாற்றவுள்ளதாக ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளன. ரிசர்வ் வங்கியில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com