ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தது; வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்ததை அடுத்து வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தது; வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு
Published on

மும்பை,

மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிவிப்பில்

ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவிதம் குறைப்பதாக தெரிவித்து உள்ளது. அதன்படி இப்போது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) விகிதம் 6 சதவீதமாக உள்ளது.

வட்டி விகிதம் குறைப்பு காரணமாக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வாங்கிய வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

2016-க்கு அக்டோபர் மாதத்திற்கு பின்னர் முதல் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது ஆறு ஆண்டுகளில் மிகவும் குறவானது. இதேபோன்று வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெபோ) 0.25 சதவிதம் குறைக்கப்பட்டு 5.75 சதவிதமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com