

புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான நிதிக்கொள்கை குழுவானது ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வழங்கும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி 6 சதவீதம் ஆக இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ஆதரவாக இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மைக்கேல் பத்ரா தவிர ஆறில் 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
இதேபோன்று ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 5.75 சதவீதம் ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம் மற்றும் எஸ்.எல்.ஆர். ஆகியவை முறையே 4 சதவீதம் மற்றும் 19.5 சதவீதம் ஆக உள்ளது.
இதேபோன்று நுகர்வோர் விலை குறியீடை அடிப்படையாக கொண்ட பணவீக்கம், கடந்த மார்ச்சில் இருந்த 5.1 சதவீதம் என்ற அளவை விட பிப்ரவரியில் 4.4 சதவீதம் என்ற அளவில் குறைந்து இருந்தது.