கூடுதல் அம்சங்களுடன் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகம்

கூடுதல் அம்சங்களுடன் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
கூடுதல் அம்சங்களுடன் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகம்
Published on

புதுடெல்லி,

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய ரிசர்வ் வங்கி ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500 ரூபாய் நோட்டுகளில் புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ரூ.200 மற்றும் ரூபாய் 2,000 புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 2016 முதல் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.முன்பு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடுகையில் இவை அளவு மற்றும் வடிவமைப்பில் வேறுபடுகின்றன.

ரிசர்வ் வங்கியின் ஆவணப்படி, மார்ச் 31, 2016 ஆம் ஆண்டில் 4.92 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது மார்ச் 2018 வாக்கில் சுமார் 10 பில்லியன்களானது. இது இரு மடங்கு அதிகமாகும்.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் அம்சங்களுடன், விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com