‘அங்கம், வங்கம், கலிங்கம்' மூன்றிலும் பாஜக ஆட்சி - அமித்ஷா

2 மாநில சட்டசபை தேர்தலில் நடைபெற்ற வாக்குப்பதிவு, ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என அமித்ஷா கூறியுள்ளார்.
 ‘அங்கம், வங்கம், கலிங்கம்' மூன்றிலும் பாஜக ஆட்சி - அமித்ஷா
Published on

கொல்கத்தா,

சட்டசபை தேர்தல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கொல்கத்தாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

2026 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாற்றிலேயே அதிக உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளது. 16 மாவட்டங்களில் உள்ள 52 தொகுதிகளில் சுமார் 92.98% என்ற மிக உயர்ந்த வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது சாதாரண எண்ணிக்கையல்ல; மக்கள் மாற்றத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று.

நேற்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர். அனைத்து தரப்பினரும் பெருமளவில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள். பல இடங்களில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. சில கிராமப்புறங்களில் 90% மேல் வாக்குப்பதிவு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவிலான வாக்குப்பதிவு, ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் மீது மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளது. அதனால் தான் இத்தகைய வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற, இந்திய மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் மேற்கு வங்க போலீசாருக்கு பாராட்டுகள். நீண்ட காலத்திற்கு பிறகு எந்த உயிரிழப்பும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றுள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி.

'அங்கம், வங்கம், கலிங்கம்'ஆகிய மூன்று இடங்களும் பாஜக மற்றும் தாமரையின் ஆட்சியின் கீழ் வரும். மேற்கு வங்காளத்தின் வெற்றி ஒட்டுமொத்த கிழக்கு இந்தியாவுக்கும் ஒரு நல்ல செய்தி என கருதுகிறேன்.

பாஜக ஆட்சி அமைந்தபின் இரவு 1 மணிக்கு கூட பெண்கள் தனியாக தைரியமாக வெளியே செல்லலாம். வங்கப் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதும், அச்சத்தில் இருந்து விடுவிப்பதுமே பாஜகவின் முன்னுரிமை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com