தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் மோகனாவை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்க பரிந்துரை

வழக்கறிஞர் மோகனா தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆவர்.
தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் மோகனாவை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்க பரிந்துரை
Published on

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் ஆலோசனை மேற்கொண்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 6 நாட்களாக இன்று வரை நடந்தது.

இந்த ஆலோசனையின் முடிவில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக ஐகோர்ட்டின் நீதிபதிகள் 4 பேர் மற்றும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோரை பதவி உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இன்று பரிந்துரை அளித்துள்ளது. இவர்களில் வழக்கறிஞர் மோகனா தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆவர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com