ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் புனரமைப்பு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்

இந்திய விடுதலை போராட்டத்தின் கொடூர நிகழ்வுகளில் ஒன்றான ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னத்தை மத்திய அரசு புனரமைத்தது. இதை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் புனரமைப்பு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்
Published on

ஆனால் வெறும் கவர்ச்சி நோக்கிலும், கார்பரேட் மயமாக்கும் வகையிலுமே இந்த பணிகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், நினைவுச்சின்னத்தின் பாரம்பரிய மதிப்பீடுகள் அனைத்தும் கெட்டு விட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதைப்போல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் மத்திய அரசை சாடியிருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக அமைச்சக செயலாளர் ராகவேந்திர சிங் கூறுகையில், ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் மீட்டெடுத்துள்ளது. பழுதடைந்த கட்டமைப்பை மாற்றுவதற்குப் பதிலாக, அதை புதிய தலைமுறையினருக்காக பாதுகாப்பதற்காக நாங்கள் அதை மீட்டெடுத்துள்ளோம் என்று கூறினார்.

ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் மிகுந்த மரியாதையுடன் புனரமைக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், அங்கு படிந்திருந்த துப்பாக்கி தோட்டாக்களின் குறிகளை மறைக்கவில்லை எனவும் அவை பாதுகாக்கப்பட்டு உள்ளன எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com