

மேற்கு வங்காளத்துக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 294 இடங்களை கொண்ட மாநில சட்டசபையில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் வரலாறு காணாத வகையில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானது.142 தொகுதிகள்:முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 142 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
அனல் பறந்த இந்த களத்தில் 1,448 வேட்பாளர்களை கட்சிகள் களமிறக்கி இருந்தன. அவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தகுதி பெற்றவர்களாக 3.21 கோடி வாக் காளர்கள் இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இவர்கள் வாக்களிப்பதற்காக 41 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. இதில் 92 .67 சதவீத ஓட்டுகள் பதிவாகின.இரண்டு கட்டங்களையும் சேர்த்து வாக்குப்பதிவு கிட்டதட்ட 93 சதவீதத்தை நெருங்கியது. மேற்கு வங்காளத்தில் சுதந்திரத்திற்கு பிறகு பதிவான அதிகபட்ச வாக்கு சதவீதம் இதுவே ஆகும்