கேரளா: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.152 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் கிறிஸ்துமஸ் நாளில் மட்டும் ரூ.54.64 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் மதுபான விற்பனை கழகத்தின் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரளா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மது விற்பனை படுஜோராக நடந்துள்ளது.

கடந்த 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் மட்டும் ரூ.152.06 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.29.90 கோடி அதிகமாகும். அதாவது 24.50 சதவீதம் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது. இதில் கிறிஸ்துமஸ் நாளில் மட்டும் ரூ.54.64 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com