"ஜெயலலிதாவை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன்" - பிரதமர் மோடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
"ஜெயலலிதாவை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன்" - பிரதமர் மோடி
Published on

சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான 24-ந்தேதி இன்று தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். இது பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

' ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக பரவலாக போற்றப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உடனான கலந்துரையாடல்கள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com