

புதுடெல்லி
நாட்டில் எந்தெந்த மாநிலங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், எந்தெந்த மாநிலங்களில் கனமழை இன்று வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
இதன்படி கோவா, ஒடிசா, குஜராத் மாநிலங்களிலும், மராட்டியத்தின் மத்திய பகுதிகள், கட்ச், கொங்கன் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளிலும் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்து உள்ளது.
இதனால், 24 மணிநேரத்தில் 204.4 மி.மீட்டருக்கும் கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும். இந்த அளவுக்கு மழை பெய்யும் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. மத்திய பிரதேச மேற்கு, மத்திய பிரதேச கிழக்கு, சத்தீஷ்கார், விதர்பா, கிழக்கு ராஜஸ்தான், உத்தராகண்ட், மேற்கு வங்காள கங்கை பகுதி, தெலுங்கானா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் தீவிர கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு ஒடிசா, வடக்கு சத்தீஷ்காரின் உள்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிக லேசானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.