கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Keralafloods2018
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
Published on

திருவனந்தபுரம்

கேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆண்டுதேறும் வழக்கம் பேல் பெய்யும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு,கேரத் தாண்டவம் ஆடியது. கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய பருவமழை, தெடர்ந்ததால், 80 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டன. கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் பேர் ஆயிரத்து 500க்கும் அதிகமான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமுளி - மினார் பகுதியில் வெள்ள நீர் அரிப்பால், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

25 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்விற்கு, உதவிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைத்தளத்தில், உருக்கமாக வேண்டுகேள் விடுத்துள்ளார்.

இன்றும் கேரளாவிற்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் காசர்கோடு தவிர சனிக்கிழமைகளில் 11 மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ய்யும் என வானிலைமயம் எச்சரித்து உள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொல்லம் மற்றும் காசர்கோடில் சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கபட்டு உள்ளது. இங்கு மஞ்சள் அலரட் விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், ஒடிசா பிராந்தியத்தில் குறைந்த அழுத்த ஏற்பட்டு உள்ளது. இது கேரளாவைச் சேர்ந்த ஐந்து மாநிலங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. என கூறபட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com