கேரளாவில் பருவமழை தீவிரம்: 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் பருவமழை தீவிரம்: 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது. கேரளாவில் உள்ள இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணுர், எர்ணாகுளம் மற்றும் திரிசூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடுக்கி (ஜூலை 17) கோட்டயம் (ஜூலை 18), எர்ணாகுளம் (ஜூலை 19), பாலக்காடு ( ஜூலை 19 மற்றும் 20), கோழிக்கோடு (ஜூலை 20) வயநாடு (ஜூலை 20), கண்ணூர் (ஜூலை 20) ஆகிய தினங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் கடந்த ஆண்டு, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து, மாநிலத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com