திருப்பதி அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு

திருப்பதி அருகே கடத்துவதற்கு தயாராக வெட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
Published on

திருப்பதி:

திருப்பதி அருகே உள்ள ராஜம்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்தகோனாவில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக சிறப்புப்படை போலீஸ் சூப்பிரண்டு மேதா சுந்தரராவுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் மேற்பார்வையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிறப்புப்படை போலீசார் இரண்டுதிருப்பதி அருகே கடத்துவதற்கு தயாராக வெட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் இரவு முதல் சாணிபயா மற்றும் வல்லமடுகு பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பெடகோனா பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படையினர் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 41 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். செம்மர கட்டைகளை வெட்டி கடத்துவதற்கு தயாராக வைத்திருந்த நபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தலைமறைவானவர்களை பிடிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com