ஹஜ் பயணத்துக்கான விமான கட்டணம் குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் பயணத்துக்கான விமான கட்டணம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹஜ் பயணத்துக்கான விமான கட்டணம் குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

வாழ்நாளில் ஒரு முறையாவது சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது, முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமானது ஆகும்.

இந்த புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு, இதுவரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மானியத்தை இந்த ஆண்டு முதல் விலக்கிக்கொள்வதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் ஹஜ் பயணத்துக்கான விமான கட்டணம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதை டெல்லியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, நிருபர்களிடம் நேற்று வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஹஜ் பயணத்துக்கான விமான கட்டண குறைப்பு மிக முக்கியமான ஒரு நடவடிக்கை ஆகும். இதில் பிரதமர் அலுவலகம், மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த கட்டண குறைப்பு, ஏர் இந்தியா, சவுதி ஏர்லைன்ஸ், பிளைனஸ் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு பொருந்தும். இந்த கட்டண குறைப்பு சலுகையை பயன்படுத்தி, இந்தியாவின் 21 விமான நிலையங்களில் இருந்து ஜெட்டாவுக்கும், மெதினாவுக்கும் செல்ல முடியும்.

மும்பையில் இருந்து இந்த விமான பயண கட்டணம் ரூ.98 ஆயிரத்து 750-ல் இருந்து ரூ. 57 ஆயிரத்து 857 என்ற அளவுக்கு குறையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com