மதம் மாற மறுப்பு; காதலியை 4-வது மாடியில் இருந்து தள்ளி, கொன்ற நபர் என்கவுண்ட்டரில் கைது

உத்தர பிரதேசத்தில் மதம் மாற மறுத்த காதலியை 4-வது மாடியில் இருந்து தள்ளி, கொன்ற நபரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு பிடித்தனர்.
மதம் மாற மறுப்பு; காதலியை 4-வது மாடியில் இருந்து தள்ளி, கொன்ற நபர் என்கவுண்ட்டரில் கைது
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் வசந்த் கஞ்ச் பகுதியில் துபாக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காலனியில் வசித்து வருபவர் சுபியான். இவர் அதே காலனியில் வசித்து வரும் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தள்ளி விட்டு அந்த இளம்பெண் கொல்லப்பட்டு உள்ளார் என பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

நிதி குப்தா என்ற அந்த இளம்பெண்ணை மதம் மாறும்படி சுபியான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார் என்று குடும்பத்தினர் எப்.ஐ.ஆர். புகாரில் தெரிவித்து உள்ளனர். காயமடைந்த அந்த இளம்பெண் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை கழகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

போலீசாரின் விசாரணையில், ஒன்றரை ஆண்டுகளாக இளம்பெண்ணை நட்பாக்க சுபியான் முயன்று வந்துள்ளார். இரு குடும்பத்தினருக்கும் நன்றாக இது தெரியும் என போலீஸ் இணை கமிஷனர் பியூர் மோர்டியா கூறியுள்ளார்.

சுபியான் பரிசு கொடுத்த நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலுக்கு பின்பு, இளம்பெண் மாடிக்கு ஓடியுள்ளார். சுபியானும் பின்னாலேயே ஓடியுள்ளார். அதன்பின்னர், ஏதோ சத்தம் கேட்டு உள்ளது.

இதன்பின்பு, தரையில் விழுந்து கிடந்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என மோர்டியா கூறியுள்ளார்.

இதன்பின்பு தப்பியோடிய சுபியான் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தலைக்கு ரூ.25 ஆயிரம் பரிசும் அறிவித்து தேடி வந்தனர்.

இந்நிலையில், சவுராஹா பகுதியில் பவர் அவுஸ் அருகே போலீசாருக்கும், பதுங்கியிருந்த சுபியானுக்கும் இடையே நேற்று நீண்ட என்கவுண்ட்டர் நடந்துள்ளது. இதில், சுபியானை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த சுபியானை அதே கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை கழகத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com