கொலையானவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கைதான ரவுடிக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி கொலையானவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதில் பிரசாந்த் அப்பய்யா எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டார்.
கொலையானவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Published on

உப்பள்ளி:-

போராட்டம்

உப்பள்ளி கசபாபேட்டை பகுதியை சோந்தவர் சந்தோஷ் (வயது 25). இவரை அதேப்பகுதியை சேர்ந்த ரவுடியான சிவா நாயக் என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து கசபாபேட்டை போலீசார் சிவாநாயக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சந்தோசின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் சந்தோசின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னா அவர்கள் கசபாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசாந்த் அப்பய்யா எம்.எல்.ஏ.

இதுபற்றி அறிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரசாந்த் அப்பய்யா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டார். அப்போது, எந்த குற்ற வழக்குகளும் இல்லாத சந்தோசை ரவுடி என்று பொய்யான தகவல் தெரிவித்தது ஏன்?, கைதான ரவுடி சிவாநாயக்கிற்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கைதான சிவாநாயக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com