

விஜயவாடா,
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்த நிலையில், முதல் மந்திரி அலுவலகம் ஊரடங்கு தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, கொரோனா பாதிப்பு விகிதம் 5%க்கு குறைவாக உள்ள மாநிலத்தின் 8 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.
எனினும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு தொடரும். இரவு 9 மணி முதல் மதுபான விற்பனை கடைகள், உணவு விடுதிகள் மற்றும் பிற கடைகள் மூடப்படும். இந்த தளர்வுகள் வருகிற ஜூலை 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.