பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 2 நபர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 2 நபர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 2 நபர்கள் விடுவிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 6 பேரை கடந்த செவ்வாய் கிழமை கைது செய்தனர். அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்களிடம் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஆவர்.

இதில் தாஹீர் என்ற மற்றொரு நபர் போலீசில் சிக்காமல் தப்பி விட்டார். அவர்கள் நாடு முழுவதும் குண்டுவெடிப்பு மற்றும் படுகொலைகளை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதுதவிர, அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தொடக்க விசாரணையில், இம்தியாஸ் மற்றும் முகமது ஜலீல் ஆகிய இருவருக்கும் எதிராக எந்தவித சான்றுகளும் இல்லை என்பதற்காக அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com