சமாஜ்வாடி கட்சி சார்பில் 159 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 159 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சி சார்பில் 159 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

லக்னோ,

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா சட்டசபைகளுக்கு, பிப்ரவரி 10ந்தேதி துவங்கி மார்ச் 7ந்தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சி 159 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் கட்சியின் தலைவரான அகிலேஷ் மெயின்பூரி மாவட்டம் கர்ஹால் தொகுதியிலும், சிறையில் உள்ள அசம்கான், அவரது மகன் அப்துல்லா அசம்கான் ஆகியோருக்கும் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com