ரிலையன்ஸ் ஜியோவை மிஞ்சும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை மிஞ்சும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவை மிஞ்சும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை
Published on

வாடிக்கையாளர்கள் புதிய சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.148க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். சூப்பர் வேல்யூ டாரிஃப் பிளான் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 70 ஜிபி அளவு 4ஜி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதன் படி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

டேட்டா மட்டுமின்றி ரூ.50 டாக்டைம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இத்துடன் நிமிடத்திற்கு 25 பைசா என்ற கட்டணத்தில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்நிறுவனத்தின் FRC 54 மற்றும் FRC 61 திட்டங்களின் கீழ் 28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி அளவு 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இரு திட்டங்களில் உள்ள வித்தியாசத்தை பொருத்தவரை FRC 61 திட்டத்துடன் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் டூ ரிலையன்ஸ் அழைப்புகள் 6 நொடிக்கு 1 பைசாவும், வெளியூர் அழைப்புகளுக்கு 2 நொடிகளுக்கு 1 பைசா என்ற வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

இதேபோன்று பாரதி ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்களும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com