மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
Published on

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-உத்தர கன்னடா மாவட்டத்தில் மழை பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. அதை நேரில் பார்வையிட நான் அந்த மாவட்டத்திற்கு இன்று செல்கிறேன். நிவாரண முகாம்களில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன்.

உள்துறை மந்திரி  ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு டெல்லி செல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com