அசுத்த நீர் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; மந்திரி பிரபு சவான் தகவல்

யாதகிரியில் அசுத்த நீர் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி பிரபு சவான் தெரிவித்துள்ளார்.
அசுத்த நீர் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; மந்திரி பிரபு சவான் தகவல்
Published on

பெங்களூரு:

யாதகிரியில் அசுத்த நீர் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி பிரபு சவான் தெரிவித்துள்ளார்.

கால்நடைத்துறை மந்திரி பிரபு சவான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

3 பேர் சாவு

யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகா அனபுரா கிராமத்தில் கடந்த 14-ந் தேதி அசுத்த நீரை குடித்திருந்த 3 பேர் உயிர் இழந்தனர். வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில், சாக்கடை கழிவுநீர் கலந்ததால், 3 பேரும் உயிர் இழந்திருந்தார்கள். அவர்களது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தேன். இதையடுத்து, அசுத்த நீரை குடித்து பலியான 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

இலவச சிகிச்சை

இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கப்படும். அதுபோல், அசுத்த நீரை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோருக்கு, அரசு சார்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. யாதகிரி மாவட்டத்திற்கு சென்று பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளேன்.

இவ்வாறு மந்திரி பிரபு சவான் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com