மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை நீக்கம்..!

நிபந்தனைகளுடன் இணையதள சேவைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை நீக்கம்..!
Published on

இம்பால்,

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில், மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நிபந்தனைகளுடன் இணையதள சேவைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. 

மொபைல் போனில் இணையதள சேவைக்கான தடை தொடர்கிறது எனவும் அரசு தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com