

புதுடெல்லி
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவில்லை.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஒருதலைப்பட்சமாக தடைசெய்யப்பட்ட" கணக்குகள் மற்றும் டுட்டுகள் - விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பான ஆட்சேபனைக்குரிய ஹேஸ்டேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக "போலி, அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் டுவீட்டுகளை வெளி வந்தன.
திங்களன்று, #ModiPlanningFarmerGenocide ஹேஸ்டேக் மூலம் டுவீட் செய்வதற்கோ அல்லது மறு டு வீட் செய்வதற்கோ 250 க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில் விவசாயிகள் இனப்படுகொலை தொடர்பான உள்ளடக்கங்கள் உள்ள கணக்குகளை உடனடிய அகற்ற வேண்டும் என டுவிட்டருக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கவில்லையெனில் டுவிட்டர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், மத்திய அரசு இன்று எச்சரித்து உள்ளது.
ஆதாரமற்ற அடிப்படையில் சமூகத்தில் துஷ்பிரயோகம், ம்ற்றும் பதற்றத்தை உருவாக்குவதற்கான உந்துதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இனப்படுகொலைக்கு தூண்டுவது பேச்சு சுதந்திரம் அல்ல; இது சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல்" என்று அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.