ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை 'கடமை பவன்' என மாற்றுங்கள்- சசிதரூர்

ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை ‘கடமை பவன்’ என மாற்றுங்கள் என்று சசிதரூர் கிண்டல் செய்து உள்ளார்.
ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை 'கடமை பவன்' என மாற்றுங்கள்- சசிதரூர்
Published on

டெல்லியில் உள்ள ராஜபாதையை (ராஜ்பாத்) மத்திய அரசு சமீபத்தில் கடமை பாதை (கர்த்தவ்ய பாத்) என பெயர் மாற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

இந்த விவகாரத்தில் தற்போது மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கிண்டல் செய்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் 'ராஜபாதை கடமை பாதையாக பெயர் மாற்றம் பெறும்போது ராஜ்பவன்கள் (கவர்னர் மாளிகைகள்) அனைத்தும் கர்த்தவ்ய பவன்கள் (கடமை பவன்கள்) என பெயர் மாற வண்டாமா? அத்துடன் ஏன் நிறுத்துகிறீர்கள்? ராஜஸ்தானை கர்த்தவ்யஸ்தான் என மாற்ற வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக ராஜ்பவன்கள் அனைத்தும் கர்த்தவ்ய பவன்கள் என்று அழைக்கப்படுமா? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ராவும் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com