

லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா, அனைவருடன் இணைந்து வளர்ச்சி காண்போம் என்று அடிக்கடி சொல்கிறது. ஆனால், விவசாயிகள் நீண்ட காலமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை அரசால் பெற முடியவில்லை.
அப்படியானால், பா.ஜனதாவின் கோஷத்தை மக்கள் எப்படி நம்புவார்கள்? பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததுபோல், தீபாவளி பரிசாக, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.