லவ் ஜிகாத்துக்கு பதிலடி... முஸ்லிம் சிறுமிகளை கவர்ந்து இழுங்கள் - பாதுகாப்பு, பணி தருவோம்: ஸ்ரீராம் சேனா அறிவிப்பு

ஆயிரக்கணக்கான இந்து சிறுமிகள், காதல் என்ற பெயரில் மோசம் போயுள்ளனர் என ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
லவ் ஜிகாத்துக்கு பதிலடி... முஸ்லிம் சிறுமிகளை கவர்ந்து இழுங்கள் - பாதுகாப்பு, பணி தருவோம்: ஸ்ரீராம் சேனா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் பாகல்கோட் நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, நிலைமை எப்படி உள்ளது என்பது பற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோம். இளைஞர்களை நான் வரவேற்க விரும்புகிறேன். இந்து சிறுமி ஒருவரை நாம் இழந்தோமென்றால், 10 முஸ்லிம் சிறுமிகளை கவர்ந்து இழுக்க வேண்டும்.

நீங்கள் அப்படி செய்வீர்களானால், உங்கள் மீது ஸ்ரீராம் சேனா அமைப்பு பொறுப்பெடுத்து கொண்டு, உங்களுக்கான பாதுகாப்பையும், வேலைவாய்ப்பையும் வழங்கும்.

லவ் ஜிகாத் என்ற பெயரில் சொந்த நலனிற்காக, நம்முடைய சிறுமிகள் நேர்மையற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். நாடு முழுவதும் காதல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு மோசடி நடைபெறுகிறது. அவர்களை நாம் எச்சரிக்கை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் உடுப்பி நகரின் கர்காலா தொகுதியில் இருந்து போட்டியிட போகிறேன் என கடந்த வாரம் அவர் கூறிய நிலையில், அவருக்கு எதிராக 109 வழக்குகள் உள்ளன.

அவற்றில் பல பா.ஜ.க. ஆட்சியில் பதிவு செய்யப்பட்டவை. இந்துத்துவா மீது எடுத்த தன் நிலைப்பாட்டால் சொந்த மக்களாலேயே தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

அரசியல் செய்வது எப்படி? என தனக்கு தெரியாது என கூறிய அவர், தன்னுடைய பார்வைகள் தெளிவாக உள்ளன என்று கூறியுள்ளார். பா.ஜ.க.வின் போலி இந்துத்துவாவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால், தற்போது பல விசயங்களை சாதித்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com