

மும்பை,
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக் கான வட்டி விகிதம் ரெப்போ விகிதம் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) ரிசர்வ் வங்கி சுமார் 4 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக உயர்த்தி இருக்கிறது. அதன்படி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்த்தி 5.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நாடுகளின் நாணய சரிவு, எல்நினோ சார்ந்த விலைவாசி அதிகரிப்பு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளன.
இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியதன் மூலம் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன், என எந்த கடன் வங்கியிடமிருந்து வாங்கி இருந்தாலும் அதற்கான வட்டி விகிதம் உயரும். உதாரணமாக ஒருவர் வங்கியில் இருந்து தனிநபர் கடனாக ரூ.10 லட்சத்தை 5 ஆண்டுக்குள் திரும்ப செலுத்தும் வகையில் வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்வோம்.
இதன் வட்டி விகிதம் 10 சதவீதம் எனில் இதுவரை மாத தவணையாக (இ.எம்.ஐ.) ரூ.21,247 செலுத்தி இருப்பார். ரெப்போ வட்டி 0.25 சதவீதம் உயர்ந்து இருப்பதன் மூலம் இனி மேல் 10.25 சதவீத வட்டி செலுத்த வேண்டியது வரும். அப்படியானால் இனிமேல் மாதம் தோறும் ரூ.21,370 செலுத்த வேண்டி யது வரும். அதாவது மாதம் தோறும் கூடுதலாக ரூ.123 செலுத்த வேண்டும். இது உதாரணத்துக்கான கணக்கு மட்டுமே.
ஒவ்வொரு வங்கிக்கும் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்க டன் போன்றவற்றின் வட்டி விகிதம் மாறுபடும். கடன் தொகை, மீதமுள்ள கடன் காலம், தற்போதைய வட்டி விகிதம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்துகிறது என்பதை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இ.எம்.ஐ. உயர்வு மாறுபடும். கடன் பெற்றவர் ஏற்கனவே செலுத்தி வந்த மாத தவணையையே செலுத்துவதாக இருந்தால், அவர் பெற்ற கடன் தொகை அடிப்படையில் மாத தவணை காலம் சற்று அதிகரிக்கும்.