

இந்த நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை மாற்ற கட்சித்தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.இது குறித்து கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை மாற்றுவது தொடர்பாக கட்சியின் உயர்மட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரம், கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெராவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது குறித்து பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். அங்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததும், தேர்தலில்
ஐ.எஸ்.எப். கட்சியுடன் கூட்டணி வைத்ததும் கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.