குடியரசு தின விழா; லஷ்கர் பயங்கரவாதிகள் வான்வழி தாக்குதலில் ஈடுபடலாம் உளவுத்துறை எச்சரிக்கை

குடியரசு தின விழாவில் லஷ்கர் பயங்கரவாதிகள் வான்வழி தாக்குதலில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குடியரசு தின விழா; லஷ்கர் பயங்கரவாதிகள் வான்வழி தாக்குதலில் ஈடுபடலாம் உளவுத்துறை எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது, அதிஉயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. புதுடெல்லி மத்திய பாதுகாப்பு முகமைகளின் பாதுகாப்பு வளைத்தின் கீழ் வந்து உள்ளது டெல்லி. ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்களை கொண்டு தாக்குதல் நடத்தலாம், இந்தியாவிற்கு நுழைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாம் என எச்சரிக்கை விடுத்தது.

டெல்லி ராஜ பாதையின் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சோதனை பணியில் பாதுகாப்பு படைகள் தீவிரமாக இறங்கியது. அப்பகுதியில் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மத்திய மற்றும் புதுடெல்லி பகுதியில் மட்டும் 50 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தனி ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதலை மேற்கொள்ளலாம் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து டெல்லி போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு முகமைகள் டெல்லியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன. ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் தொழில்நுட்பத்தை போலீஸ் பயன்படுத்துகிறது. வான் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பறக்கும் பொருட்கள் தொடர்பாகவும் கண்டறிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

வான்வழி தாக்குதலை முறியடிக்கும் விதமான ஆயுதங்களுடன் டெல்லியின் உயர்வான கட்டிடங்கள் மீது பாதுகாப்பு படை நிலைக்கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியின் முக்கியமான பகுதிகளில் கேமராக்கள் நிருவப்பட்டு உள்ளது, காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள பாதுகாப்பு படை ஆடையை பயன்படுத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலை போன்று தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொள்ளலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com