குடியரசு தின ஊர்தி அணிவகுப்பு – உத்தர பிரதேச மாநிலத்திற்கு முதல் இடம்

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக டெல்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு ஊர்தி நடைபெற்றது.
குடியரசு தின ஊர்தி அணிவகுப்பு – உத்தர பிரதேச மாநிலத்திற்கு முதல் இடம்
Published on

லக்னோ,

இந்திய குடியரசு தினம் கடந்த ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக டெல்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு ஊர்தி நடைபெற்றது.

இதில், மராட்டியம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அலங்கார வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநில அலங்கார வாகனம் ராமர் கோவில் மாதிரியால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்தாண்டு அணிவகுப்பில் மொத்தம் 25 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. மத்திய அரசின் முக்கிய துறைகளைச் சார்ந்த 13 அலங்கார ஊர்திகளும், 12 மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஊர்தி பரிசை தட்டி சென்றுள்ளது.

கர்நாடக ஊர்தி இரண்டாவது இடத்தையும், மேகாலயா ஊர்தி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மக்கள் மனம் கவர்ந்த ஊர்தியாக மராட்டியத்தின் ஊர்தியும் தேர்வாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com