குடியரசு தின அணிவகுப்பு: அதில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி

குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் அடங்கி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பு: அதில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் உடன் பிரதமர் மோடி பேசியதாவது:-

குடியரசு தின அணிவகுப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் செயல்படும் அரசியலமைப்பிற்கு தலைவணங்குகிறது.

குடியரசு தின அணிவகுப்பு, நமது அரசியலமைப்புக்கு செலுத்தும் மரியாதை. பலவித மொழிகள், உச்சரிப்புகள், உணவுகள் இருந்தாலும் இந்தியா ஒன்றுதான்.

குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் அடங்கி உள்ளது. நாட்டை வலிமையாக்க நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம்.

கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஏழை மற்றும் பொது மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும். தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பும் ஒவ்வொரு அமைப்பையும் நாம் தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com