கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை; பொதுமக்கள் போராட்டம்

சிக்கமகளூருவில் பணியில் அலட்சியமாக இருக்கும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை; பொதுமக்கள் போராட்டம்
Published on

சிக்கமகளூரு;

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் அரசு சார்ந்த வேலைக்கு சென்றனர். அங்கு பணி செய்யும் அதிகாரிகள், அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து, மெத்தனமாக செயல்படுகின்றனர்.

சான்றிதழ்கள் போன்றவற்றுக்கு அலுவலகத்தை நாடினால், முறையாக பதில் அளிக்காமல், காலம் தாழ்த்துகின்றனர். எனவே பணியில் அலட்சியமாக செயல்படும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து தாசில்தார் நாகேசிடம் அதுதொடர்பான மனு ஒன்றை கொடுத்துவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com