டோமினிக்காவுக்கு மெகுல் சோக்சி கடத்தப்பட்டதை விசாரிக்க லண்டன் போலீசிடம் வேண்டுகோள்

டோமினிக்காவுக்கு மெகுல் சோக்சி கடத்தப்பட்டதை விசாரிக்க வேண்டும் என்று லண்டன் போலீசிடம் மெகுல் சோக்சியின் வக்கீல்கள் குழு கேட்டுக்கொண்டனர்.
டோமினிக்காவுக்கு மெகுல் சோக்சி கடத்தப்பட்டதை விசாரிக்க லண்டன் போலீசிடம் வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்திருந்தார். அங்கிருந்து கடந்த மாதம் 23-ந் தேதி டோமினிக்காவுக்கு சென்றபோது, சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.

ஆனால், ளோமினிக்காவுக்கு கடத்திச் சென்றதாகவும் மெகுல் சோக்சி கூறி வருகிறார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்தநிலையில், லண்டனில் உள்ள மெகுல் சோக்சியின் வக்கீல்கள் குழு நேற்று லண்டன் மெட்ரோபாலிடன் போலீசை அணுகியது. சித்ரவதை, போர்க்குற்றம், இனப்படுகொலை ஆகியவை எங்கு நடந்தாலும் அதை விசாரிக்க மெட்ரோபாலிடன் போலீசில் தனிப்பிரிவு இருப்பதால், அப்பிரிவு மெகுல் சோக்சி டோமினிக்காவுக்கு கடத்தப்பட்டதை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதற்கு மெட்ரோபாலிடன் போலீசார், என்ன நடந்தது என்பதை அறிய ஒரு விசாரணை அதிகாரியை டோமினிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததாக சோக்சியின் வக்கீல் மைக்கேல் போலக் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com