

புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை வரவேற்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் பா.ஜனதா இந்த முடிவை எடுத்துள்ளது. வேலைவாய்ப்பே இல்லாதநிலையில், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்று கூறுவது தேர்தல் ஏமாற்று வேலை. இருப்பினும், மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இடஒதுக்கீடு பெறாத பிரிவினரில் ஏழைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.