இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது-இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்

இந்திய வங்கித்துறை வலுவாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.
படம்: ANI
படம்: ANI
Published on

மும்பை

மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. மத்திய அரசு அதற்கு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது சுற்று விளைவுகள் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை ஏற்படுத்துகிறது. இது வெளிப்படையாக உலகளாவிய வளர்ச்சியில் ஒத்திசைவான மந்தநிலையின் விளைவாக இருக்கும், அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் வளர்ச்சி வேகமும் ஓரளவு பாதிக்கப்படும்.

சுற்றுலா, விமான நிறுவனங்கள், விருந்தோம்பல் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் செயல்பாட்டு இழப்பை சந்தித்து வருகின்றன. இந்திய வங்கித்துறை வலுவாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது

மார்ச் 18-ந்தேதி முதல் யெஸ் வங்கி வழக்கம் போல் செயல்படும். யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும். யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது.

உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை உங்கள் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். எந்தவொரு தேவையற்ற கவலையும் அடையவேண்டாம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com