இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.02 சதவீதமாக வீழ்ச்சி

செப்டம்பரில் சில்லறை பணவீக்கம் 5.02 சதவீதமாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.02 சதவீதமாக வீழ்ச்சி
Published on

புதுடெல்லி,

கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.02 சதவீதமாக பதிவாகி உள்ளது. இத்தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.83 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருட்களின் விலை குறைந்ததுதான் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று புள்ளியியல் அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஜூலை மாதம், ஒரேயடியாக 7.44 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்தது. அதைத்தொடர்ந்து தற்போது குறைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com