பனிச்சரிவை எதிர்கொள்ள ராணுவத்துக்கு உதவும் ஓய்வு பெற்ற வீரர்

பனிச்சரிவை எதிர்கொள்ள ராணுவத்துக்கு ஓய்வு பெற்ற வீரர் ஒருவர் உதவி செய்து வருகிறார்.
பனிச்சரிவை எதிர்கொள்ள ராணுவத்துக்கு உதவும் ஓய்வு பெற்ற வீரர்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் இமயமலை அடிவாரத்தில் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு பனிச்சரிவு சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. சமீபத்தில் கூட அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது ராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரரான முகமது இலியாஸ் அகமது உதவினார்.

வடக்கு காஷ்மீரின் டாங்தர் பகுதியை சேர்ந்த அவர் தற்போது பனிச்சரிவை எதிர்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவருக்கு நேற்று முன்தினம் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறுகையில், ஒரு ராணுவ வீரன் தான் கல்லறைக்கு செல்லும்வரை எப்போதும் ராணுவ வீரனாகவே இருப்பான். நாட்டுக்காகவும், ராணுவத்துக்காகவும் பணி செய்வதே முதல் கடமை ஆகும் என்று தெரிவித்தார். காஷ்மீரில் 31 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இலியாஸ் அகமது கடந்த 2016-ம் ஆண்டுதான் ஓய்வு பெற்றிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com