'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.22 லட்சம் மோசடி!

ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.22 லட்சம் மோசடி!
Published on

பெங்களூரு,

'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்

உடுப்பி டவுன் பகுதியில் 76 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அவரது செல்போ னில் 'வாட்ஸ்-அப்'பில் வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அதனை எடுத்து முதியவர் பேசி உள்ளார். அப்போது எதிர்முனையில் போலீஸ் சீருடையில் தோன்றிய நபர், மும்பை கொலாபா சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி பேசுவதாக தெரிவித்தார்.

மேலும் மும்பையில் உங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனக்கு மும்பையில் எந்த வங்கி கணக்கும் இல்லை என தெரிவித்தார். அப்போது அந்த நபர், உங்களது அடையாள அட்டையை வைத்து வங்கி கணக்கு தொடங்கப்பட் டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்டுள்ளதா கவும் தெரிவித்தார்.

ரூ.22 லட்சம் மோசடி

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் போலீஸ் உயர் அதிகாரி. அமலாக்கத்துறை அதிகாரி என பலர் அவரை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி உள் ளனர். மேலும், வங்கி கணக்கு சரிபார்ப்புக்காக உங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஆர்.டி.ஜி.எஸ். மூலம் தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், சரிபார்ப்பு முடிந்த பிறகு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடக்காதது உறுதியானால் பணத்தை திருப்பி அனுப்புவதாக வும் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய முதியவர், பல்வேறு தவணைகளில் ரூ.22 லட்சம் வரை அனுப்பி உள்ளார். இதற்கிடையே தான் டிஜிட்டல் கைது மோசடி குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் மர்மநபர்களை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் முதியவரால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மர்மநபர்கள் தன்னை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.22 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து முதியவரான ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com