ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுனில் குமார் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்ட துணை வளர்ச்சி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுனில் குமார் (வயது 61). பீகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்ட சுனில் குமார் பணி ஓய்வுக்குப்பின் ராஞ்சியின் சிந்தோ கன்ங் பார்க் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வசித்து வந்தார்.

சுனில் குமாரின் குடும்பத்தினர் பாட்னாவில் வசித்து வந்த நிலையில் அவர் மட்டும் ராஞ்சியில் வசித்து வந்தார்.

தூக்கிட்டு தற்கொலை

இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுனில் குமார் அதற்கான மருத்துவ சிகிச்சைகளும் எடுத்து வந்தார்.

இந்நிலையில், சுனில் குமார் இன்று ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சுனில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை, உடல்நலக்குறைவு, வயது முதிர்வால் தற்கொலை செய்துகொண்டதாக சுனில் குமார் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com