

லக்னோ
உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணையம் ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஆணையம் அமைக்கப்படுவதாகவும், ஆணையம் இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
லகிம்பூர் வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்கிறது. அமர்வில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹீமா கோலி இடம்பெறுகின்றனர்.