பணி ஓய்வு பெற்ற ‘விராட்’ குதிரை - தட்டிக் கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசு தின அணிவகுப்பிற்கு பின்னர், பிரதமர் மோடி ‘விராட்’ குதிரையை தட்டிக் கொடுத்து அதற்கு விடை கொடுத்தார்.
பணி ஓய்வு பெற்ற ‘விராட்’ குதிரை - தட்டிக் கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதியின் மெய்க்காவலர் பிரிவில் இடம்பெற்றிருந்த விராட் என்னும் குதிரை, இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறது. இதனையடுத்து இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பிற்கு பின்னர், பிரதமர் மோடி விராட் குதிரையை தட்டிக் கொடுத்து அதற்கு விடை கொடுத்தார்.

இந்த விராட் குதிரை, கடந்த 2003 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் மெய்க்காவலர் பிரிவில் இணைந்தது. இதுவரை குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில், 13 முறை விராட் பங்கேற்றுள்ளது. கடந்த ஜனவரி 15 அன்று ராணுவ தினத்தை முன்னிட்டு விராட் குதிரைக்கு ராணுவ தலைமை தளபதியின் சிறப்பு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com