மத்திய நிதியமைச்சகத்திடமிருந்து வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிப்பு!

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை 14 மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.7,183.42 கோடியை இன்று விடுவித்தது.
மத்திய நிதியமைச்சகத்திடமிருந்து வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிப்பு!
Published on

புதுடெல்லி,

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை 14 மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.7,183.42 கோடியை இன்று விடுவித்தது. 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடியை வழங்குமாறு 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. 12 மாத தவணைகளாக இதனை வழங்க செலவினத்துறை பரிந்துரை அளித்துள்ளது. இம்மாதத்தில் 8-ஆவது தவணையுடன் சேர்த்து நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்தம் ரூ.57,467.33 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாசலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இந்த மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com