

புதுடெல்லி,
வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் கூறுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.3 சதவிகிதமாகவே தொடரும். இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல்-மே மாதம் முதல் உயர தொடங்கியுள்ளது என்றார்.
வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது.