

புதுடெல்லி,
சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசாக வழங்கப்படும் எனவும் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த புதிய திட்டம் அக்டோபர் 15, முதல் மார்ச் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ. 5 லட்சத்தை ஆரம்ப மானியமாக போக்குவரத்துத் துறைகளுக்கு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து, பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பாற்ற பொதுமக்களை ஊக்கப்படுத்தவே இந்த புதிய திட்டத்தை அரசு அறிவித்து உள்ளது.