கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

கிருமி நாசினி தயாரிக்க அரிசி பயன்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது குறித்து ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
Published on

புதுடெல்லி,

இந்திய உணவு கழகத்தில் உபரியாக உள்ள அரிசியை எத்தனால் ஆக மாற்றி அதன் மூலம் கைகளை சுத்தப்படுத்தும் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி நாசினியை தயாரிக்கவும் மற்றும் அந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கவும், தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டில் உள்ள ஏழைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களுக்கான அரிசியை பயன்படுத்தி பணக்காரர்களின் கைகளை கழுவும் கிருமி நாசினி தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போதுதான் விழித்துக் கொள்ளப் போகிறார்களோ? என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com