

மும்பை
கார்த்தி சிதம்பரம் நேற்று டில்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவர விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவரிடம் வாக்குமூலம் பெற ஒரு நாள் போதவில்லை. மேலும் 14 நாள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என சி.பி.ஐ., தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட கோர்ட் மேலும் 5 நாள் அவரை சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
மேலும் கார்த்தி சார்பில் கோரப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 நாள் விசாரணை முடிந்து வரும் 6-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைஅவர் சுப்பிரமணீய சுவாமி கூறியதாவது:
கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., காவலில் அனுப்ப எடுத்த முடிவு சரியானது."கார்த்தியின் ஆலோசனையால் அபிஷேக் மன் சிங்வி முன்வைத்த வாதங்களில் உண்மை இல்லை, எனவே நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளித்தது மற்றும் சிபிஐ காவலுக்கு கார்த்தியை அனுப்பியது"
கார்த்தியிடம் விசாரணை நடத்தினால் இந்த வழக்கில் பி..சிதம்பரம் தொடர்பு வைத்திருப்பது குறித்து தெரிய உதவும்.
இந்த திட்டத்தை ஒப்புக்கொண்டதே சிதம்பரம் தான். இந்த திட்டம் நடத்தப்பட்டது ரூ. 5 கோடிக்கு. இது பணத்தை மோசடி செய்வதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
வழக்கில் உள்ள எந்தவொரு நிறுவனங்களுடனும் கார்த்திக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அபிஷேக் மனு சிங்வி வாதத்தில், எந்தவிதத்திலும் உண்மை இல்லை என்று சுவாமி கூறினார்.