கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x

கோப்புப்படம்

தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

புதுடெல்லி,

ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் வகையில் கட்டாய கல்வி உரிமை சடடம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை அரசே ஏற்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த சட்டத்தின்படி நடப்பு கல்வியாண்டுக்கு இதுவரை சேர்க்கை தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஈஸ்வரன் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, நிதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு வழங்காமல் காலம் தாழ்த்த கூடாது. உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர்.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (திங்கட்கிழமை) விசாரிக்கிறது. இதற்கிடையே தனது தரப்பு கருத்தையும் கேட்க கோரி ஈஸ்வரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

1 More update

Next Story