கேரளாவில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் உயர்வு - சுகாதார மந்திரி தகவல்

கேரளாவில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுகாதார மந்திரி சைலஜா தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் உயர்வு - சுகாதார மந்திரி தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரள சுகாதார துறை மந்திரி சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் தனியார் கொரோனா பரிசோதனை மையங்களில் ஐகோர்ட்டு உத்தரவின்படி, கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதணை கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான மற்ற அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் பழைய கட்டண அடிப்படையில் வசூலிக்கப்படும்.

கேரளாவில் நேற்று 5,714 பேருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 19 கொரோனா நோயாளிகள் இறந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 902 ஆக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com